/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்டெக்ஸ் தொட்டியின் மோட்டார் ஒயர் திருட்டு
/
சின்டெக்ஸ் தொட்டியின் மோட்டார் ஒயர் திருட்டு
ADDED : ஆக 12, 2024 06:53 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி வாரச்சந்தை அருகே, சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி மூலம் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்த குடிநீர் தொட்டியின் மின் இணைப்பு ஒயரை மர்ம நபர்கள் வெட்டி திருடி சென்றனர்.இதுகுறித்து, டவுன் பஞ்., தலைவர் சகுந்தலாவிற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, பஞ்., பணியாளர்கள் விசாரணை நடத்தினர். எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதேபோல், மேட்டுமருதுார் ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலையில் கூடலுார் மயானத்தில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின், மின் ஒயரை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். கடந்த, நான்கு மாதங்களுக்கு முன், இதேபோல் ஒயர் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

