/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேங்காம்பட்டியில் கொசு ஒழிப்பு பணி
/
வேங்காம்பட்டியில் கொசு ஒழிப்பு பணி
ADDED : நவ 08, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டி கிராமத்தில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்-பத்துார் பஞ்சாயத்து, வேங்காம்பட்டி கிராமத்தில் பொது சுகாதா-ரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.
இதில், மழை காலத்தை முன்னிட்டு குடியிருப்பு பகுதிகளில், மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில், கழிவு குப்பை, பழைய பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள், பழைய டயர்கள் அகற்றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல், குடிநீர் தொட்டி பராமரிப்பு ஆகிய பணிகள் நடந்தன. இப்பணிகளில் மஸ்துார் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

