/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தாழ்வாக வட்டமடித்த விமானத்தால் பரபரப்பு
/
தாழ்வாக வட்டமடித்த விமானத்தால் பரபரப்பு
ADDED : ஜன 19, 2026 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, வயலுார், சரவணபுரம், பாப்பக்காபட்டி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மாலை, 5:25 மணிக்கு சிறிய ரக விமானம் ஒன்று, அதிக சத்தத்துடன் வானில் தாழ்வாக வட்டமடித்தபடி சுற்றி சென்றது.
வீட்டில் இருந்த மக்கள், விமானத்தின் சத்தம் கேட்டு அச்சத்தில் வெளியே ஓடிவந்து, தாழ்வாக பறந்த விமானத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

