/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கருப்பணசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
/
கருப்பணசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : மே 02, 2025 01:04 AM
குளித்தலை
குளித்தலை அடுத்த, மேல பணிக்கம்பட்டியில் கருப்பண சுவாமி, காத்தவராயன், மதுரை வீரன், சப்த கன்னிமார்கள், பட்டவன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய புதியதாக கோவில் கட்டுவது என பங்காளிகள், பொது மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று முன்தினம் காலை பொது மக்கள், பக்தர்கள் மருதுார் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வந்தனர். புனிதநீர் அடங்கிய கும்பத்தை, சிவாச்சாரியார் சுவாமிநாதன் தலைமையில், சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, லட்சார்ச்சனை நடத்தினர்.
நேற்று காலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும், புனித நீர் கும்பத்தை சிவாச்சாரியார்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்
பட்டது.
அதனை தொடர்ந்து மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் குடிபாட்டுக்காரர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

