/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீடுகளில் சோலார் பேனல் அமைக்க தபால் நிலையத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

ADDED : மார் 09, 2024 01:05 AM
கரூர் மத்திய அரசின் சூரிய மின் திட்டத்தின் கீழ், சோலார் பேனல் அமைக்க, தபால் நிலையங்களில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் சூரிய வீடு திட்டத்தில், வீடுகளில் சோலார் பேனல் அமைத்து தர பொது மக்களின் விருப்பம் மற்றும் விபரங்களை சேகரிக்கும் பணியை, இந்திய அஞ்சல் துறை செய்து வருகிறது.
வீடுகளில் சோலார் பேனல் அமைத்து மாதம், 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் இணைவோர், தங்களின் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதுடன், உபரி மின்சாரத்தை வினியோகம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டத்தில் அரசு மானியமாக, 30 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இந்த திட்டம் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய உதவும். இந்த திட்டம் தொடர்பாக, விபரங்களை சேகரிக்கும் பணிகள் தபால் நிலையங்களில் தொடங்கியது. விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள, தபால் நிலைங்களை அணுகலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.