/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு விழா
/
இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு விழா
இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு விழா
இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ADDED : மார் 10, 2024 03:25 AM
கரூர்: இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) கரூரின், 16வது புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.
சிஐஐ கரூர் முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்சங்கர் தலைமை வகித்தார். மாநில தலைவர் சங்கர் வானவராயன், சிறப்பு விருந்தினர் காவேரி மருத்துவமனை சேர்மன் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பின்னர் புதிதாக 2024-25ம் ஆண்டுக்கான சிஐஐ கரூர் மாவட்ட தலைவராக பிரணவ் டெக்ஸ்டைல்ஸ் கிரியேசன் பிரைவேட் லிட் பாலசுப்பிரமணி, துணைத்தலைவராக ஜெய்கந்த முருகன் கிரானைட்ஸ் பிரபு ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில், கரூர் மாவட்டத்தின் விஷன் 2030க்கு, 50 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெற லோகோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சிஐஐ கரூர் தலைவர் சிவகண்ணு, யங் இந்தியன்ஸ் தலைவர் கார்த்திகேயன், துணை தலைவர் யோகேஷ், சிஐஐ கரூர் மாவட்ட தலைவர் சந்தியா சுதாகர், துணைத்தலைவர் தேவி பிரித்திவி, ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சங்க கவுரவ தலைவர் நாச்சிமுத்து, தலைவர் கோபால
கிருஷ்ணன் மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

