/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளியுங்கள்: எம்.எல்.ஏ., சரஸ்வதி
/
மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளியுங்கள்: எம்.எல்.ஏ., சரஸ்வதி
மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளியுங்கள்: எம்.எல்.ஏ., சரஸ்வதி
மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளியுங்கள்: எம்.எல்.ஏ., சரஸ்வதி
ADDED : ஏப் 08, 2024 07:31 AM
கரூர் : ''மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றால் தான், பல்வேறு திட்டப்பணிகளை கொண்டு வரமுடியும்,'' என, பா.ஜ., மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி தெரிவித்தார்.
கரூர், வெங்கமேட்டில் உள்ள என்.எஸ்.கே., நகர், செந்குந்தர் நகர், கொங்கு நகர், எஸ்.பி., காலனி, வாங்கப்பாளையம், பெரிய குளத்துபாளையம், கே.வி.பி., நகர் உள்பட பல்வேறு இடங்களில் பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி பேசியதாவது:
கரூர் லோக்சபா தொகுதி எம்.பி., ஜோதிமணி, தொகுதி பக்கமே எட்டி பார்க்கவில்லை. பொதுமக்களில் பலருக்கு, எம்.பி., யார் என்றே தெரியவில்லை. மோடி மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ., வேட்பாளர் செந்தில் நாதனை வெற்றிபெற செய்யுங்கள். அப்போது தான், பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வரமுடியும்.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, வேட்பாளர் செந்தில்நாதன் பேசியதாவது: கரூர் மாநகராட்சியில், வாரம் ஒருமுறை கூட குடிநீர் வினியோகமில்லை. இந்த மாநகராட்சி செயல் இழந்து கிடக்கிறது. ஆனால், 24 மணி நேரமும் சந்து கடைகள் மூலம் மது விற்பனை நடக்கிறது. பள்ளி மாணவர்கள் கையில் கூட கஞ்சா கிடைக்கிறது. தங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என, தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். சுயநலவாதிகள் மத்தியில், பொதுநல எண்ணம் கொண்ட எனக்கு வாக்களிக்க வேண்டும். என்னுடைய மொபைல் எண்ணை தருகிறேன். என்னை தேர்வு செய்தால், எப்போது வேண்டுமானலும் தொடர்பு கொள்ளலாம். ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என, தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். அதற்கு ஏமாறாமல் பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

