/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
68 மதுபாட்டில் பறிமுதல் நான்கு பேருக்கு காப்பு
/
68 மதுபாட்டில் பறிமுதல் நான்கு பேருக்கு காப்பு
ADDED : ஜூலை 21, 2025 08:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம் டாஸ்மாக் அருகே, நேற்று முன்தினம் இரவு, மது விற்பனையில் ஈடுபட்ட, நாடார்மேடு இந்திரா காந்தி வீதியை சேர்ந்த சிவகுமார், 46, என்பவரை, சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் தாலுகா போலீசார், கஸ்பாபேட்டை பூந்துறை சாலை பகுதியை சேர்ந்த சதீஷ் பாபு, 41; சூரம்பட்டி போலீசார், சூரம்பட்டி வலசு திரு.வி.க. வீதியை சேர்ந்த தண்ட பாணி, 29; வீரப்பன்சத்திரம் போலீசார், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவீகம்புதுாரை சேர்ந்த அருண், 27, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 68 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

