தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வாழைத்தார்கள் வரத்து அதிகரிப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை

வாழைத்தார்கள் வரத்து அதிகரிப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை

வாழைத்தார்கள் வரத்து அதிகரிப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை


ADDED : அக் 19, 2024 01:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 01:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழைத்தார்கள் வரத்து அதிகரிப்பு

விலை குறைவால் விவசாயிகள் கவலை

கரூர், அக். 19-

தொடர் மழை மற்றும் காற்றால் சரிந்த வாழைத்தார்கள், கரூரில் விற்பனைக்கு குவிந்துள்ளது. விலை குறைந்துள்ளதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும், வட

கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த, 2 முதல் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை, காற்று காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில், வாழைத்தார்கள் சாய்ந்தது. அதை விவசாயிகள் வெட்டி எடுத்து திருச்சி, கரூர், மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே செயல்படும், வாழைத்தார் மண்டிக்கு நாள்தோறும், ஆயிரக்கணக்கான வாழைத்தார்கள் விற்பனைக்கு வருகிறது. ஏற்கனவே, கரூர் மாவட் டத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்கு வருவதால், விலை குறைந்துள்ளது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: மழை காரணமாக, சாய்ந்த வாழைத்தார்கள் விற்பனைக்கு வருகிறது. இதனால், கரூரில் இருந்து, வெளியூர்களுக்கு வாழைத்தார்களை அனுப்ப முடியவில்லை. தொடரும் மழை, காய்ச்சல் காரணமாக, வாழைப்பழத்தை பொதுமக்களும் சாப்பிடாமல் தவிர்த்து வருகின்றனர். இதனால், வாழைத்தார்களின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த மாதம், 500 ரூபாய்க்கு விற்ற பூவன் தார் நேற்று, 300 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 400 ரூபாயில் இருந்து, 200 ரூபாய்க்கு விற்கிறது. நேந்திரம் பழம் ஒன்று, 10 ரூபாயில் இருந்து ஏழு ரூபாய், செவ்வாழை, 10 ரூபாயில் இருந்து, எட்டு ரூபாய்க்கு விலை குறைந்து விட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us