ADDED : செப் 29, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலைகுளித்தலை அடுத்த குமாரமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 30; கூலித்தொழிலாளி. இவரது கணவர் ரஞ்சித், 38; விவசாயி. இவருக்கு கடந்த, மூன்று ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை. இதனால், மருத்துவர்களின் அறிவுரைப்படி, மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரஞ்சித், நேற்று காலை, 9:00 மணிக்கு வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் கொடுத்த தகவல்படி, குளித்தலை போலீசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவரது மனைவி கிருஷ்ணவேணி கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

