நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதியில், பூக்கள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், காட்டூர், செக்கணம், எழுதியாம்பட்டி, புதுப்பட்டி, சரவணபுரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
பூக்கள் பறிக்கப்பட்டு கரூர், திருச்சி, முசிறி ஆகிய பகுதிகளில் செயல்படும் பூ மார்க்கெட்டுகளுக்கு விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.தற்போது பூக்களுக்கு விலை இல்லாமல் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விரிச்சிப்பூக்கள் கிலோ, 20 ரூபாய், சின்னரோஜா கிலோ, 40 ரூபாய், செண்டுமல்லி பூக்கள் கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனையானது. பூக்கள் விலை சரிவு காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் தை மாத பொங்கல் பண்டிகையின்போது, பூக்கள் விலையில் உயர்வு ஏற்படும் என விவசாயிகள் கூறினர்.

