/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரியாற்றின் கிளை வாய்க்கால் பாலத்தில் தடுப்பு சுவர் கட்ட எதிர்பார்ப்பு

ADDED : நவ 11, 2025 01:52 AM
கரூர், கரூர் அருகே, காவிரியாற்றின் கிளை வாய்க்கால் பாலத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புகழூரில் காவியாற்றின் பாசன கிளை வாய்க்கால் செல்கிறது. அந்த பகுதியில் புகழூர் குடியிருப்பு பகுதியை இணைக்கும் வகையில், காவிரியாற்றின் பாசன கிளை வாய்க்கால் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன், சிறுபாலம் கட்டப்பட்டது. விவசாயிகள், பொதுமக்கள் அந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 2020ல் புகழூர் காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. பாசன கிளை வாய்க்கால் மேல் பகுதியில் அமைந்த, சிறுபாலத்தை கதவணை கட்டும் பணியில் உள்ள தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சிறுபாலத்தின் வழியாக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகிறது. ஆனால், சிறுபாலத்தின் இரண்டு பக்கமும், தடுப்பு சுவர்கள் இல்லை. எனவே, காவிரியாற்றின் பாசன கிளை வாய்க்கால் மீது, தடுப்பு சுவர்கள் கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடி க்கை எடுக்க வேண்டியது அவசியம்.