/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மோசமான சாலையால் ஓட்டுனர்கள் அவதி

ADDED : டிச 19, 2025 06:03 AM
கரூர்: கரூரில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் அருகே, பசுபதிபாளையம் ஐந்து சாலை அருகே நெரூர் சாலையில், திருச்சி மற்றும் திண்டுக்கல் செல்லும் ரயில்வே இருப்பு பாதை உள்ளது. இதற்கு அடியில், நெரூர், வாங்கல் செல்ல சாலை அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்-டப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் கீழே உள்ள, சாலை வழியாக வாங்கல், நெரூர், கோயம்பள்ளி உள்ளிட்ட பல்-வேறு கிராமங்களுக்கு பொது மக்கள், கார், இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்-நிலையில், மேம்பாலத்தில் கீழ் பகுதியில் உள்ள சாலைகள் சேத
மடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால், மழை பெய்யும் போது, தண்ணீர் தேங்-குகிறது. அப்போது, வாகனங்களை சரிவர இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படு-கின்றனர்.
எனவே, ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் உள்ள சேதமடைந்த சாலையை, சீரமைக்க மாவட்ட நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவ-சியம்.