/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மண் கடத்தலில் ஈடுபட்ட டிரைவர் தப்பி ஓட்டம்
/
மண் கடத்தலில் ஈடுபட்ட டிரைவர் தப்பி ஓட்டம்
ADDED : டிச 12, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை பகுதிகளில் கிராவல் மண், மணல், கற்கள் சட்ட விரோதமாக கடத்துவதாக, குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீக்கு வந்த ரகசிய தகவலின்படி, நேற்று முன்தினம் தோகைமலை
பாறைப்பட்டி அருகே, வேகமாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதி இல்லாமல் மண் கடத்தியது தெரியவந்தது. அவரது உத்தரவின்படி, தோகைமலை போலீசார் டாரஸ் லாரியை பறிமுதல் செய்தனர் ஆனால், டிரைவர் தப்பி விட்டார். கன்னியா-குமரி மாவட்டம், மணியன்
குழியை சேர்ந்த டிரைவர் பிரசாந்த், 34, லாரி உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

