/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புலியூர் டவுன் பஞ்.,ல் கவுன்சிலர்கள் கேள்வி: தி.மு.க.,வை சேர்ந்த துணைத்தலைவர் வெளிநடப்பு
/
புலியூர் டவுன் பஞ்.,ல் கவுன்சிலர்கள் கேள்வி: தி.மு.க.,வை சேர்ந்த துணைத்தலைவர் வெளிநடப்பு
புலியூர் டவுன் பஞ்.,ல் கவுன்சிலர்கள் கேள்வி: தி.மு.க.,வை சேர்ந்த துணைத்தலைவர் வெளிநடப்பு
புலியூர் டவுன் பஞ்.,ல் கவுன்சிலர்கள் கேள்வி: தி.மு.க.,வை சேர்ந்த துணைத்தலைவர் வெளிநடப்பு
ADDED : பிப் 28, 2024 07:48 AM
கரூர் : புலியூர் டவுன் பஞ்சாயத்து கூட்டத்தில், கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதால், தி.மு.க., வை சேர்ந்த துணைத்தலைவர், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்து கூட்டம், தலைவர் புவனேஷ்வரி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் இ.கம்யூ., கட்சி கவுன்சிலர் கலாராணி, பா.ஜ., கவுன்சிலர் விஜயகுமார் ஆகியோர் வார்டு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தி.மு.க., வை சேர்ந்த தலைவர் புவனேஷ்வரிக்கு பதிலாக, துணைத்தலைவர், தி.மு.க., வை சேர்ந்த அம்மையப்பன் பதில் கூறினார். அதற்கு, இ.கம்யூ., கட்சி கவுன்சிலர் கலா ராணி, பா.ஜ., கவுன்சிலர் விஜயகுமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, துணைத்தலைவர் அம்மையப்பன் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து, தி.மு.க., கவுன்சிலர்களும் வெளியேறினர். சிறிது நேரத்தில் கூட்டம் நிறைவு பெற்றது.இதுகுறித்து, இ.கம்யூ., கட்சி கவுன்சிலர் கலாராணி நிருபர்களிடம் கூறியதாவது:புலியூர் டவுன் பஞ்., தலைவர் பதவி, தி.மு.க., கூட்டணியில் எனக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், துணைத்தலைவர் அம்மையப்பன் என்னை வர விடாமல், தி.மு.க., வை சேர்ந்த பெண் கவுன்சிலர் புவனேஷ்வரியை, தலைவர் ஆக்கி விட்டு, தானே தலைவர் போல செயல்படுகிறார். தீர்மானங்களை முன் கூட்டியே முடிவு செய்து, தி.மு.க., கவுன்சிலர்களிடம் கைெயழுத்து பெற்று நிறைவேற்றி வருகிறார். வார்டு பிரச்னைகளை பேச, துணைத்தலைவர் அம்மையப்பன் அனுமதிப்பது இல்லை. புலியூர் டவுன் பஞ்.,ல் கவுன்சிலர்கள் ஜனநாயக ரீதியாக செயல்பட முடியவில்லை.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

