/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
/
கிருஷ்ணராயபுரத்தில் திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
கிருஷ்ணராயபுரத்தில் திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
கிருஷ்ணராயபுரத்தில் திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
ADDED : பிப் 28, 2024 07:48 AM
கரூர் : கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேலமாயனுார் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு தலைமை நீரூற்று நிலையத்தில், 274 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பயன்பாட்டில் உள்ளதை ஆய்வு செய்தார்.
மேலும் ரங்கநாதபுரம் பஞ்சாயத்தில் கட்டளை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தினசரி வருகை பதிவேடு, குழந்தைகள் எடை, உயரம், வளர்ச்சி குறித்தும், தொடர்ந்து குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கவும் தினசரி மையத்திற்கு வரவழைத்து, தேவையான செயல்முறைகளையும் கற்பிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் வீராச்சாமி, உதவி பொறியாளர் சிவராஜ், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) குரல்செல்வி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

