/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அரசு கல்லூரியில் கால நிலை மாற்றம் கருத்தரங்கம்
/
குளித்தலை அரசு கல்லூரியில் கால நிலை மாற்றம் கருத்தரங்கம்
குளித்தலை அரசு கல்லூரியில் கால நிலை மாற்றம் கருத்தரங்கம்
குளித்தலை அரசு கல்லூரியில் கால நிலை மாற்றம் கருத்தரங்கம்
ADDED : பிப் 09, 2024 11:44 AM
குளித்தலை: குளித்தலை, அரசு கலைக் கல்லுாரி தமிழாய்வுத் துறை சார்பாக காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திருச்சி பெரியார் அரசு கலைக் கல்லுாரி முன்னாள் முதல்வர் செல்வராசு, திருச்சி தேசிய கல்லுாரி மண்ணியல் துறை இணை பேராசிரியர் செல்வராஜ் ஆகியோர் பேசியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக பூமி வெப்பமாகி கொண்டே வருகிறது. இதனால் மிகப் பெரிய பிரச்னையை எதிர்காலத்தில் சந்திக்க உள்ளோம். குறிப்பாக விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கும். மேலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும், மரபணு குறைபாடு காரணமாக பெரும்பான்மையான தம்பதியர்களுக்கு குழந்தை பேர் இல்லாமையும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக, இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏழு வகையான சிற்றுயிரிகள் அழிந்துள்ளன. வெப்பமயமாதலின் காரணமாகவும், உலக சுற்றுச்சூழல் மாசுபடுவதன் காரணமாகவும் லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வாழ்ந்த, 700 சிற்றுயிரிகள் கடந்த, 12 ஆண்டுகளில் அழிந்து போய் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தென் துருவத்தில் இருக்கக்கூடிய பனிப்பாறைகள் உருகினால் அடுத்த, 50 ஆண்டுகளில் 100 அடி வரை கடல் நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. 100 அடி கடல் நீர் மட்டம் உயர்ந்தால் கடற்கரை ஓரமாக இருக்கக்கூடிய தீவுக் கூட்டங்களும், குறிப்பாக இந்தியாவை பொறுத்தவரை சென்னை உள்ளிட்ட சில நகரங்களும், கடலுாரும் மூழ்கி விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு பேசினர்.
தமிழ்த்துறை தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், கருத்தரங்கத்தில் பங்கேற்ற, 265 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

