/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரஜினிகாந்த் பட போஸ்டர் ஒட்டிய ரசிகர் மன்ற தலைவர் மீது வழக்கு
/
ரஜினிகாந்த் பட போஸ்டர் ஒட்டிய ரசிகர் மன்ற தலைவர் மீது வழக்கு
ரஜினிகாந்த் பட போஸ்டர் ஒட்டிய ரசிகர் மன்ற தலைவர் மீது வழக்கு
ரஜினிகாந்த் பட போஸ்டர் ஒட்டிய ரசிகர் மன்ற தலைவர் மீது வழக்கு
ADDED : அக் 12, 2024 01:11 AM
ரஜினிகாந்த் பட போஸ்டர் ஒட்டிய
ரசிகர் மன்ற தலைவர் மீது வழக்கு
கரூர், அக். 12-
கரூரில், நடிகர் ரஜினிகாந்த் பட போஸ்டர் ஒட்டியதாக, மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள, வேட்டையன் திரைப்படம், நேற்று முன்தினம் தியேட்டரில் வெளியானது. அதை வரவேற்று, கரூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் கீதம் ரவி, 52; கரூர் ஆர்.டி.ஓ., அலுவலக சுவற்றில் அனுமதி இல்லாமல் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.
இதுகுறித்து, போலீஸ் எஸ்.ஐ., ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்படி, கரூர் டவுன் போலீசார், ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் கீதம் ரவி மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
டூவீலர் மோதி வாலிபர் காயம்
அரவக்குறிச்சி, அக். 12-
அரவக்குறிச்சி அருகே எலவனுார், சின்ன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் விவேக் குமார், 33. இவர் நேற்று வெங்கடாபுரம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இதே பகுதியை சேர்ந்த தங்கவேல் செட்டியார் மகன் ஆறுமுகம், 37, என்பவர் ஓட்டி வந்த டூவீலர் நின்று கொண்டிருந்த விவேக்குமார் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி, கீழே விழுந்த விவேக் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சின்னதாராபுரம் போலீசார், ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

