/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்
/
அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்
ADDED : ஆக 31, 2025 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட ஊர்க்காவல் படை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கரூர் ஏஞ்சல் அமைப்பு சார்பில், ரத்ததான முகாம், அரசு மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று நடந்தது.
கரூர் எஸ்.பி., ஜோஸ் தங்கையா ரத்த தானம் வழங்கி, நிகழ்ச்-சியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, தன்னார்வலர்கள் பலர் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில், ஆயுதப்படை டி.எஸ்.பி., வெங்கடாச்சலம், ஊர்க்காவல் படை நிர்வாகிகள் நீலா-வதி, மீனா, ரோட்டரி கிளப் ஆப் ஏஞ்சல் அமைப்பு நிர்வாகிகள் மஞ்சுளா, காவேரி உள்பட பலர் பங்கேற்றனர்.