sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெற்றிலை விலை குறைவு: அதிர்ச்சியில் விவசாயிகள்

/

வெற்றிலை விலை குறைவு: அதிர்ச்சியில் விவசாயிகள்

வெற்றிலை விலை குறைவு: அதிர்ச்சியில் விவசாயிகள்

வெற்றிலை விலை குறைவு: அதிர்ச்சியில் விவசாயிகள்


ADDED : டிச 23, 2025 05:27 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில், லாலாப்பேட்டை, மகிளிப்-பட்டி, சிந்தலவாடி, கருப்பத்துார், வதியம், மணத்-தட்டை, குளித்தலை, மருதுார், புகழூர், வேலாயு-தம்பாளையம் ஆகிய பகுதிகளில், வெற்றிலை விவசாயம் நடக்கிறது. நடப்பாண்டு வெற்றிலை சாகுபடி அதிகளவில் உள்ளது.

உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், மார்கழி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் இல்லாததால், விலை குறைந்துள்ளது. இதனால், வெற்றிலை விவசாயிகள் அதிர்ச்சியில் உள்-ளனர்.

இதுகுறித்து, வெற்றிலை விவசாயிகள் கூறிய-தாவது:காவிரியாற்றில் தண்ணீர் செல்வதால், நடப்-பாண்டு தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. இதனால், வெற்றிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

மேலும், வெற்றிலைக்கு கடந்த, இரண்டு மாதங்-களுக்கு முன் இருந்த விலை தற்போது இல்லை. நடப்பு மார்கழி மாதத்தில், திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் இல்லாததால் விலை குறைந்-துள்ளது. கடந்த வாரம், 104 கவுளி கொண்ட வெற்-றிலை இளம்பயிர், 6,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாகவும்; கற்பூர வெற்றிலை இளம்பயிர், 4,000 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாயாகவும் விலை குறைந்துள்ளது.

அதேபோல், வெற்றிலை முதியம் பயிர், 3,000 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாய்க்கும், கற்பூர வெற்றிலை முதியம் பயிர், 2,000 ரூபாயில் இருந்து, 1,250 ரூபாய்க்கும் விலை குறைந்துள்-ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us