/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மஞ்சள் விலை உயர காத்திருப்பு வரத்து இல்லாததால் ஏலம் ரத்து
/
மஞ்சள் விலை உயர காத்திருப்பு வரத்து இல்லாததால் ஏலம் ரத்து
மஞ்சள் விலை உயர காத்திருப்பு வரத்து இல்லாததால் ஏலம் ரத்து
மஞ்சள் விலை உயர காத்திருப்பு வரத்து இல்லாததால் ஏலம் ரத்து
ADDED : பிப் 28, 2024 07:48 AM
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டையில், கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம், வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. மஞ்சள் அறுவடை ஜன., மாதத்தில் ஆரம்பித்து பிப்.,ல் விற்பனைக்கு வரத்தொடங்கும். நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, அரியாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜன., கடைசி வாரத்திலேயே மஞ்சள் அறுவடை தொடங்கி விட்டது.
இதனால், பிப்., முதல் வாரத்திலேயே மஞ்சள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றும் மஞ்சள் வரத்து இல்லாததால், தொடர்ந்து, 6வது வாரமாக மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து, ஆயில்பட்டியை சேர்ந்த மஞ்சள் வியாபாரி ஜெயவேல் கூறியதாவது: இந்தாண்டு நாமகிரிப்பேட்டையில் குறைந்தளவில் மட்டும் தான் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். இதனால், விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தற்போது, மூட்டை, 16,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. இன்னும் சில வாரங்களில், 20,000 ரூபாயை கடந்து விடும். அப்போது தான் விவசாயிகள் தங்களது மஞ்சளை விற்க முன் வருவர்.இவ்வாறு அவர் கூறினார்.

