/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே பாலம் கீழ் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம்
/
ரயில்வே பாலம் கீழ் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம்
ரயில்வே பாலம் கீழ் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம்
ரயில்வே பாலம் கீழ் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம்
ADDED : பிப் 26, 2024 07:05 AM
கரூர் : ரயில்வே பாலம் கீழ் பகுதியில், சமூக விரோதிகள் நடமாட்டம் காரணமாக பெண்கள் அச்சப்படும் நிலை ஏற்படுகிறது.
கரூர்- - சேலம் பைபாஸ் சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ்பகுதி வழியாக பெரிய குளத்துப்பாளையம், சின்னகுளத்துப் பாளையம், வெங்கமேடு பகுதிக்கு நடந்தும், இருசக்கர வாகனத்திலும் சென்று வருகின்றனர். பாலத்தின் கீழ் பகுதியில் போதுமான பாதுகாப்பில்லை. சமூக விரோதிகள் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மதுஅருந்திவிட்டு அட்டகாசம் செய்கின்றனர். போதையில் ரகளையிலும் ஈடுபடுகின்றனர்.
இதனால், தனியாக செல்லும் பெண்கள் கிண்டல், கேலி பேச்சுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, போலீசார் அடிக்கடி ரோந்து சென்று கண்காணித்து, சமூக விரோதிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.