/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குற்றவியல் சட்டம் திரும்ப பெற கோரி கரூரில் ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 25, 2024 01:34 AM
கரூர்: கரூர் ஜவகர் பஜாரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன், ஏ.ஐ.டி.யு.சி., சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.எல்.பி.எப்., மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை வகித்தார்.
இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் அமல்படுத்துவதை வாபஸ் பெற வேண்டும். தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை திரும்ப பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்-பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் அப்பாசாமி, பழனிசாமி, ஜீவானந்தம், வடி-வேலன் உள்பட பலர் பங்கேற்றனர்.