/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரவுண்டானாவில் செயல்படாத சிக்னல் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு
/
ரவுண்டானாவில் செயல்படாத சிக்னல் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு
ரவுண்டானாவில் செயல்படாத சிக்னல் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு
ரவுண்டானாவில் செயல்படாத சிக்னல் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு
ADDED : பிப் 26, 2024 01:57 PM
கரூர்: கரூர்- கோவை பிரிவு சாலையில், சிக்னல் அடிக்கடி இயங்காததால் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன.
கரூர் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, தாராபுரம், திருப்பூர், பல்லடம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், பஸ்களும் திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதி வழியாக செல்கிறது. இங்கு, கோவை, ஈரோடு என இரண்டு பிரிவு சாலைகள் செல்கிறது.
இங்குள்ள சிக்னல் பல நேரங்களில் செயல்படாமல் உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் அனைத்து வாகனங்களும் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. இதனால் வாகன விபத்துகள் நடந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்னல் அமைக்கப்பட்டது. இது அடிக்கடி பழுதாகி விடுவதால், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். எனவே, சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.