sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ உற்பத்தி குறைவால் உருண்டை வெல்லம்அச்சு வெல்லம் விலை ரூ.100 அதிகரிப்பு

உற்பத்தி குறைவால் உருண்டை வெல்லம்அச்சு வெல்லம் விலை ரூ.100 அதிகரிப்பு

உற்பத்தி குறைவால் உருண்டை வெல்லம்அச்சு வெல்லம் விலை ரூ.100 அதிகரிப்பு


ADDED : மார் 07, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2025 01:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உற்பத்தி குறைவால் உருண்டை வெல்லம்அச்சு வெல்லம் விலை ரூ.100 அதிகரிப்பு

கரூர்,:குறைந்து வரும் உற்பத்தியால், அச்சு மற்றும் உருண்டை வெல்லம் விலை சற்று அதிகரித்துள்ளது.கரூர் மாவட்டத்தில், காவிரியாற்றின் கரையோர பகுதிகளான நொய்யல், நடையனுார், சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு, கரும்பை பதிவு செய்துள்ள விவசாயிகள் தவிர, மற்றவர்கள் நன்கு விளைந்த கரும்பை, கரும்பாலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால், வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 25க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டப்பட்டு நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள, வெல்ல சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது கரூர் புகளூர், திருச்சி பெட்டவாய்த்தலையில் உள்ள, தனியார் சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி துவங்கியுள்ளது. இதனால் வெல்லம் தயாரிக்கும் உள்ளூர் ஆலைகளுக்கு, கரும்பு அதிகளவில் கிடைப்பது இல்லை. உற்பத்தி குறைவால் அச்சு வெல்லம், உருண்டை வெல்லத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, வெல்லம் தயாரிப்பாளர்கள் கூறுகையில்,'கரும்பு தட்டுப்பாட்டால் வெல்லம் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் ஒரு சிப்பம், (30 கிலோ) அச்சு வெல்லம், 1,300 ரூபாயில் இருந்து, 1,450 ரூபாயாக விலை அதிகரித்தது. உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,200 ரூபாய்க்கு விற்றது. நடப்பு வாரம், 100 ரூபாய் அதிகரித்து, 1,300 ரூபாய்க்கு வெல்லம் விற்பனையாகிறது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us