sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தான்தோன்றிமலை பஞ்., யூனியனுக்கு அ.தி.மு.க.,ஆட்சியில் குடிநீர் திட்டம் வந்தது: மாஜி அமைச்சர்

/

தான்தோன்றிமலை பஞ்., யூனியனுக்கு அ.தி.மு.க.,ஆட்சியில் குடிநீர் திட்டம் வந்தது: மாஜி அமைச்சர்

தான்தோன்றிமலை பஞ்., யூனியனுக்கு அ.தி.மு.க.,ஆட்சியில் குடிநீர் திட்டம் வந்தது: மாஜி அமைச்சர்

தான்தோன்றிமலை பஞ்., யூனியனுக்கு அ.தி.மு.க.,ஆட்சியில் குடிநீர் திட்டம் வந்தது: மாஜி அமைச்சர்


ADDED : ஏப் 10, 2024 02:19 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்;''தான்தோன்றிமலை பஞ்., யூனியனுக்கு, 80 கோடி ரூபாய் செலவில், காவிரி குடிநீர் வழங்கப்பட்டது,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், ஏமூரில் நடந்த பிரசாரத்தின் போது பேசியதாவது:கடந்த சட்டசபை தேர்தலில், 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க., அரசு, ஒரு சில வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றி விட்டு, 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் பொய் பேசுகிறார். இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், பசு மாடு, ஆடு உள்ளிட்ட பல திட்டங்களை, தி.மு.க., அரசு கைவிட்டு விட்டது. இன்னும், 24 அமாவாசைகள் முடிந்த பிறகு, அ.தி.மு.க., ஆட்சிதான். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தான் மீண்டும் முதல்வர். அப்போது, அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

கடந்த எம்.பி., தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிமணி கடந்த, நான்கரை ஆண்டுகளாக தொகுதி பக்கம் வரவில்லை. இதனால், ஜோதிமணிக்கு செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு உள்ளது. ஜோதிமணிக்கு பொதுமக்களிடம் உள்ள எதிர்ப்பை, அ.தி.மு.க., நிர்வாகிகள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவுக்கு, அதிக ஓட்டுக்கள் கிடைக்கும்படி, தேர்தல் பணியாற்ற வேண்டும். கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிமணி செல்லும் இடங்களில் எல்லாம், பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், கரூர் தொகுதியில் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி உறுதியாகியுள்ளது.

அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை வெற்றி பெற வைத்தால், லோக்சபா நடக்கும் நாட்களை தவிர, மற்ற நாட்களில் கரூர் தொகுதியில் இருப்பார். கடந்த, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், கரூர் மாவட்டத்துக்கு, அதிகளவில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

தான்தோன்றிமலை பஞ்., யூனியன் பகுதிகளுக்கு, 80 கோடி ரூபாய் செலவில், காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது, பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம், நாடக மேடை கேட்டு, பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை, வெற்றி பெற வைத்தால், உடனடியாக நாடக மேடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், மாவட்ட எம்.ஜிஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் பால கிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us