ADDED : ஏப் 15, 2024 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில், பல இடங்களில் குப்பை சேகரிக்க தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குப்பையை கொட்டி வந்தனர். தற்போது, குப்பை தொட்டிகள் உடைந்த நிலையில் உள்ளது. சாலையில் கொட்டியுள்ள குப்பையால், சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை சேகரிக்க, ரயில்வே ஸ்டேஷன் சாலையில், புதிய தொட்டிகள் வைக்க வேண்டியது அவசியம்.

