/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனுமதி இல்லாமல் கூட்டம் கூடியதாக புகார் மாஜி அமைச்சர், வேட்பாளர்கள் மீது வழக்கு
/
அனுமதி இல்லாமல் கூட்டம் கூடியதாக புகார் மாஜி அமைச்சர், வேட்பாளர்கள் மீது வழக்கு
அனுமதி இல்லாமல் கூட்டம் கூடியதாக புகார் மாஜி அமைச்சர், வேட்பாளர்கள் மீது வழக்கு
அனுமதி இல்லாமல் கூட்டம் கூடியதாக புகார் மாஜி அமைச்சர், வேட்பாளர்கள் மீது வழக்கு
ADDED : மார் 27, 2024 04:00 PM
கரூர்: கரூரில் அனுமதி இல்லாமல் கூடியதாக, மாஜி அமைச்சர், அ.தி.மு.க.,- பா.ஜ.,- நா.த.க., வேட்பாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம். ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு, நேற்று முன்தினம் மாலை அணிவித்த பிறகு, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், வேட்பாளர் தங்கவேல் உள்ளிட்ட, அ.தி.மு.க.,வினர் கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய சென்றனர். ஆனால், அனுமதி இல்லாமல் கூட்டம் கூடியதாக கூறி, தான்தோன்றிமலை பி.டி.ஓ., வினோத்குமார் அளித்த புகாரின்படி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேட்பாளர் தங்கவேல், அவைத்தலைவர் திருவிகா, ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட, அ.தி.மு.க., வினர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
* கரூர் மாவட்ட பா.ஜ., தலைவரும், வேட்பாளருமாகிய செந்தில்நாதன், நேற்று முன்தினம் தான்தோன்றி மலை பகுதியில் இருந்து, கட்சியினருடன் கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அனுமதி இல்லாமல் கூட்டம் கூடியதாக, கரூர் சார்பதிவாளர் கோமதி அளித்த புகாரின்படி, வேட்பாளர் செந்தில்நாதன், பா.ஜ., நிர்வாகிகள் ரவி, சாரங்கபாணி உள்ளிட்ட, பா.ஜ., வினர் மீது, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* கரூர் மனோகரா கார்னர் பகுதியில், அனுமதி இல்லாமல் கூட்டம் கூடியதாக, கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் நன்மாறன், வேட்பாளர் கருப்பையா உள்ளிட்ட, அக்கட்சி யினர் மீது, தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் தமிழ்செல்வி போலீசில் புகார் அளித்தார்.
மாவட்ட செயலாளர் நன்மாறன், வேட்பாளர் கருப்பையா உள்ளிட்ட, நாம் தமிழர் கட்சியினர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக் கின்றனர்.

