/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி பணி மும்முரம்
/
சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி பணி மும்முரம்
ADDED : ஏப் 05, 2024 04:43 AM
கிருஷ்ணராயபுரம்: வயலுார் கிராமத்தில், சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் கிராமத்தில், கடந்த மாதம் நெல் வயல்கள் அறுவடை செய்யப்பட்டது. அடுத்த சாகுபடியாக, நிலங்களில் சிவப்பு சோளம் பயிர்கள் நடவு பணி செய்யப்பட்டது. பயிர்களுக்கு தேவையான தண்ணீர், கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்பட்டது. நடவு செய்யப்பட்ட சிவப்பு சோளம் வளர்ந்து வருகிறது.
பயிர்கள் மேலும் வளர்ந்து வரும் வகையில், தொழிலாளர்களை கொண்டு களை எடுக்கும் பணி துரிதமாக நடக்கிறது. குறைந்த தண்ணீர் கொண்டு, சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் சோளம் பயிர்கள், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது.

