/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செழிப்புடன் வளர்ந்த சிவப்பு சோள பயிர்
/
செழிப்புடன் வளர்ந்த சிவப்பு சோள பயிர்
ADDED : ஏப் 23, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த கட்டளை, ரெங்கநாதபுரம், வீரராக்கியம், மணவாசி, ஆர்.புதுக்கோட்டை ஆகிய பகுதியில் விவசாயிகள் சிவப்பு சோளம் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். பயிர்களுக்கு போர்வெல் தண்ணீர் மற்றும் கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
மேலும் சிவப்பு சோளம் பயிர்களுக்கு குறைந்த தண்ணீர் மட்டும் தேவை என்பதால், தட்டுப்பாடு இன்றி பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. தற்போது சோளம் பயிர்கள் செழிப்பாக பசுமையாக வளர்ந்து வருகிறது. சிவப்பு சோளம் பயிர்கள், கால்நடை களுக்கு தீவனமாக பயன்படுகிறது.

