ADDED : ஏப் 28, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:வீரியபாளையம் பகுதிகளில், கத்திரிக்காய் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரியபாளையம் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள குரும்பபட்டி, கொமட்டேரி, லட்சுமணம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் காய்கறி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் கத்திரிக்காய், தக்காளி, வெண்டைக்காய் சாகுபடி நடந்து வருகிறது தற்போது அதிகமாக கத்திரிக்காய் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. செடிகளுக்கு கிணற்று பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
கத்திரிக்காய் செடிகளில் இருந்து காய்கள் பறிக்கப்பட்டு, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். தற்போது கத்திரிக்காய் கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
