/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
விநாயகர் ஊர்வலத்தில் மோதல் லாரி கண்ணாடி உடைப்பு
/
விநாயகர் ஊர்வலத்தில் மோதல் லாரி கண்ணாடி உடைப்பு
ADDED : செப் 01, 2025 07:20 AM
நாகர்கோவில் : நாகர்கோவிலில் ஹிந்து முன்னணி சார்பில் நேற்று நடந்த விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில் வந்தவர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. லாரி கண்ணாடி உடைக்கப்பட்டது.
ஹிந்து முன்னணி சார்பில் நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து தொடங்கிய விநாயகர் சிலை ஊர்வலம் கோட்டார் டி.வி.டி. காலனி வந்தபோது அதில் ஒரு லாரியை டெம்போ முந்தி செல்ல முயன்றது. லாரி வழி விடாததால் டெம்போவில் இருந்தவர்களுக்கும் ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் இருளப்பபுரம் ஜங்ஷனை அடைந்த போது திடீரென ரோட்டில் இறங்கி ஆடத் தொடங்கினர். வாகனத்தில் சென்ற இளைஞர்கள், வேடிக்கை பார்த்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர்கள் கற்களை எடுத்து குடியிருப்பு மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள் மீது வீசி எறிந்தனர். ஏ.டி.எஸ்.பி. லலித் குமார் தலைமையிலான போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர் .
உடையப்பன்குடியிருப்பு பகுதியில் ஊர்வலம் வந்து போது மீண்டும் திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் லாரி மீது கல் வீசியதால் கண்ணாடி உடைந்தது.
இதனையடுத்து வாகனங்கள் நடுவழியில் நிறுத்தி ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் இருதரப்புக்கும் சமாதானம் ஏற்பட்டு ஊர்வலம் சங்கு துறை பீச் வந்தடைந்தது.