/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
6 எஸ்.எஸ்.ஐ., உட்பட ஏழு பேர் இடமாற்றம்
/
6 எஸ்.எஸ்.ஐ., உட்பட ஏழு பேர் இடமாற்றம்
ADDED : ஆக 27, 2025 03:13 AM
நாகர்கோவில்:தொடர் புகார் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஆறு எஸ். எஸ். ஐ. உட்பட ஏழு பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அஞ்சு கிராமம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரோடுகள் வழியாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கனிமங்கள் ஏற்றி லாரிகள் அதிகம் செல்கின்றன.
முறையான அனுமதி இருந்தும் போலீசாரின் அதிக கெடுபடியும் வசூல் வேட்டையும் காரணமாக தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள மினிலாரி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எஸ்.பி. ஸ்டாலினை சந்தித்துக் கொடுத்த மனுவில் போலீசாரின் பண வேட்டை பற்றியும் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த டி.எஸ்.பி.க்கு எஸ்.பி., உத்தரவிட்டார். இதற்கிடையில் அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் அலங்கார வளைவு கட்டுவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக மாறி மோதும் சூழ்நிலை ஏற்பட்டது. இதில் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இதையடுத்து அஞ்சுகிராமம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த ஆறு எஸ்.எஸ்.ஐ., ஒரு போலீஸ் என 7 பேர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.