sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

தி.மு.க., ஆட்சியில் என்ன நன்மை கிடைத்துள்ளது: இ.பி.எஸ்., கேள்வி

/

தி.மு.க., ஆட்சியில் என்ன நன்மை கிடைத்துள்ளது: இ.பி.எஸ்., கேள்வி

தி.மு.க., ஆட்சியில் என்ன நன்மை கிடைத்துள்ளது: இ.பி.எஸ்., கேள்வி

தி.மு.க., ஆட்சியில் என்ன நன்மை கிடைத்துள்ளது: இ.பி.எஸ்., கேள்வி


UPDATED : மார் 27, 2024 07:24 PM

ADDED : மார் 27, 2024 06:28 PM

Google News

UPDATED : மார் 27, 2024 07:24 PM ADDED : மார் 27, 2024 06:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோயில்: ‛‛ தி.மு.க., ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் என்ன நன்மை கிடைத்துள்ளது '' என கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேளவி கேட்டார்.

இ.பி.எஸ்., மேலும் பேசியதாவது: டீசல் விலை குறைப்போம் எனக்கூறிய தி.மு.க., குறைக்க வில்லை. மத்திய அரசும் குறைக்கவில்லை. இதனால், நடுத்தர மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்துவார்கள். தி.மு.க., கார்பரேட் கம்பெனி. குடும்பம். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆட்சி வருவதற்கு தான் வீதிவீதியாக சென்று மக்களை சந்திக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்ய அல்ல. அ.தி.மு.க., வேட்பாளர்கள் மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற போராடுபவர்கள். பாடுபடுவார்கள். வாதாடுபவர்கள்.

கட்சியைச் சேர்ந்தவர்களை குடும்பமாக பார்ப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை தி.மு.க., தலைவராக வர ஏற்பாடு செய்யுங்கள். முதல்வராக வர செய்யுங்கள்.ஆனால், குடும்பத்தினர் அதிகாரத்திற்கு வருவதற்கு சொல்கின்றனர். கட்சியினரை ஏமாற்றுகின்றனர். அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டர் கூட உயர்ந்த பொறுப்புக்கு வருவர்.அ.தி.மு.க.,வில் உழைப்பவர்களுக்கு மரியாதை உண்டு. தி.மு.க.,வில் குடும்ப அரசியல் தான்.

தி.மு.க., ஆட்சி வந்த பிறகு கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டு உள்ளது. சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிமுக.,வில் முக்கிய பதவிகளில் உள்ளனர். திமுக.,வில் இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் என்ன நன்மை கிடைத்துள்ளது. இம்மாவட்ட மக்கள் என்ன பலன்பெற்றுள்ளது. ஸ்டாலின் குடும்பம் பலன் பெற்றது. மாநிலத்திலும், மத்தியிலும் கொள்ளை அடிப்பதே திராவிட மாடல் ஆட்சி.

சொத்து வரியை உயர்த்த மாட்டோம் எனக்கூறிய திமுக 150 சதவீதம் வரியை உயர்த்திவிட்டது.குப்பைக்கும் வரி போட்டு உள்ளனர். வரி போடாத இனங்களே இல்லை. அனைத்து இனங்களிம் வரி போடும் அரசு திமுக அரசு மட்டும் தான். தி.மு.க., நிர்வாகி ஒருவர் தாக்கியதாக போலீஸ்காரர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும் நிலை உள்ளது. திமுக அயலக அணி உள்ளது. போதைப்பொருள் கடத்துவதற்காகவே இந்த அணி உருவாக்கியது போல் தெரிகிறது.

இன்பநிதியும் வந்து விட்டார்; :பிரசாரத்தில் இ.பி.எஸ்., கிண்டல்!


தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லாம் தான் தனக்கு குடும்பம் என்கிறார் ஸ்டாலின்.

அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தி.மு.க., தலைவர் ஆகட்டும்; முதல்வராக வர ஏற்பாடு செய்யுங்க!

அதையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஓட்டு வாங்குவதற்கு மட்டும் நிர்வாகிகளும் தொண்டர்களும் குடும்பம் என்பார்கள். ஆட்சி அதிகாரத்துக்கு அவர்கள் குடும்பம் மட்டும் தான்!

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அடுத்து இப்போது இன்பநிதியும் வந்து விட்டார்.ஆனால் அ.தி.மு.க., அப்படியில்லை; சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும்.

இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.






      Dinamalar
      Follow us