/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
லஞ்சம்: வி.ஏ.ஓ., உதவியாளர் சஸ்பெண்ட்
/
லஞ்சம்: வி.ஏ.ஓ., உதவியாளர் சஸ்பெண்ட்
ADDED : ஏப் 05, 2025 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்,:கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளத்தில் ரூ.3000 லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.,) மற்றும் கிராம உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தலக்குளம் கிராம அலுவலகத்தில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்குவதற்காக பயனாளியிடமிருந்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி அமலா ராணி, உதவியாளர் பேபி ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தக்கலை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து பத்மநாபபுரம் சப்-கலெக்டர் வினய்குமார் மீனா உத்தரவிட்டார்.

