/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தண்ணீர் வராததால் கருகும் 1,200 ஏக்கர் பயிர்
/
தண்ணீர் வராததால் கருகும் 1,200 ஏக்கர் பயிர்
ADDED : மார் 09, 2024 12:59 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையில் இருந்து பத்மநாபபுரம் -- புத்தனார் கால்வாய் வழியாக, விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த கால்வாயில், 2021ம் ஆண்டு பெய்த பெருமழையில் உடைப்பு ஏற்பட்டது.
அதை சரி செய்ததால், 2023ல் மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டது. அப்போதும் நிரந்தரமாக சரி செய்யவில்லை. இதனால், கும்பப்பூ சாகுபடி தாமதமாக துவங்கியது.
இந்தக் கால்வாயால் பாசனம் பெறும், 1,235 ஏக்கரில் நெற்பயிர்களில் தற்போது தான் கதிர்கள் வளரத் துவங்கியுள்ளன. இந்த நேரத்தில் பயிர்களுக்கு தண்ணீர் அவசியம். ஆனால், பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருக துவங்கியுள்ளன.
கால்வாய் உடைப்பு, அணை அடைப்பு போன்ற பல காரணங்களால் தாமதமாக துவங்கிய கும்பப்பூ பயிர்களை பாதுகாக்க, கூடுதல் நாட்கள் தண்ணீர் திறந்து விட வேண்டும் என, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். தண்ணீர் திறக்க, தமிழக அரசு ஆணை வெளியிட்டது. எனினும், பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாயில் தண்ணீர் விடவில்லை. இதனால், பயிர்கள் கருகி வருகின்றன.
எனவே, உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புத்தனாறு கால்வாய் பாசன சபை தலைவர் ராதாகிருஷ்ணன், அரசை வலியுறுத்தியுள்ளார். இந்த கால்வாயால் பாசனம் பெறும் பகுதி, அமைச்சர் மனோ தங்கராஜின் தொகுதி.

