/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் மகளிர் தின விழா
/
காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் மகளிர் தின விழா
ADDED : மார் 11, 2024 11:05 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில், சர்வதேச மகளிர் தின விழா நேற்று நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, காஞ்சிபுரம் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்க பொறுப்பாளர் சாய்லட்சுமி ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர்.
இதில், காது கேளாத மகளிர் பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மகளிருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
கலை நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் காஞ்சிபுரம் மாவட்ட காதுகேளாதோர் சங்க பொறுப்பாளர் சந்தோஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சங்க பொறுப்பாளர் ஜெயபாரத் ஆகியோர் பரிசு வழங்கினர்.

