/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிப்போம்: அமைச்சர் சுப்ரமணியன்
/
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிப்போம்: அமைச்சர் சுப்ரமணியன்
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிப்போம்: அமைச்சர் சுப்ரமணியன்
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிப்போம்: அமைச்சர் சுப்ரமணியன்
ADDED : மார் 04, 2024 06:24 AM

காஞ்சிபுரம் : நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தலில், முதல்வர் அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தாள் விழா பொது கூட்டம், நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர் தி.மு.க.,- -- எம்.எல்.ஏ.,வுமான சுந்தர் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
காஞ்சிபுரத்தில், பகுத்தறிவாளர் எந்தளவிற்கு நிரம்பி இருக்கின்றனரோ, அதே அதே அளவிற்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு உடையவர்கள் நிரம்பி உள்ளனர்.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, 33 மாதங்களில், 1,461 குடமுழக்குகள், 6,442 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், 304 கோடி ரூபாய் செலவில், 197 பழைமை வாய்ந்த கோவில்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.
மக்களை தேடி மருத்துவம், தொற்றாநோய் சிகிச்சை அளிக்கும் திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம் என, பல்வேறு திட்டங்களை துவக்கி உள்ளார். நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தலில், முதல்வர் அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்போம்.
அனைத்து தொகுதிகளிலும், 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து சாதனை படைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

