/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு
/
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு
ADDED : டிச 30, 2025 06:01 AM

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேருந்து நிலையம் எதிரே உள்ள கோபால் நாயுடு தெருவின் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
வாலாஜாபாத் அடுத்துள்ள கட்டவாக்கம், வாரணவாசி, சிங்காடிவாக்கம் மற்றும் ஒரகடம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இந்த தொழற்சாலைக்கு செல்லும் வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தினமும் வாலாஜாபாத் வரை பைக் மூலம் வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து தொழிற்சாலைகளுக்கு செல்கின்றனர்.
இவ்வாறு தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், தங்கள் பைக்குகளை பேருந்து நிலையம் எதிரே உள்ள கோபால் நாயுடு தெருவின் இருபுறத்திலும் நிறுத்திவிட்டு, பணிக்கு சென்று விட்டு வந்து எடுத்து செல்கின்றனர்.
இதனால், கோபால் நாயுடு தெரு வழியாக வாலாஜாபாத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வோர் நெரிசல் காரணமாக சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையம் எதிரே கோபால் நாயுடு தெருவின் இருபுறங்களில் வாகனங்கள் நிறுத்தம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

