/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரத்தினாங்கி அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்
/
ரத்தினாங்கி அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்
ADDED : பிப் 27, 2024 10:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டையில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், மாசி மாத செவ்வாய்க்கிழமையான நேற்று, மூலவர் மற்றும் உற்சவருக்கு திருநீறு அபிஷேகம் நடந்தது.
பின், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்சவர் முருகபெருமான் ரத்தினாங்கி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் செய்து இருந்தார்.

