/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரயிலில் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் இருவர் கைது
/
ரயிலில் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் இருவர் கைது
ADDED : நவ 17, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,இரண்டு நாட்களுக்கு முன், அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில், வியாசர்பாடி நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் ஏறினர். ரயிலில் தொங்கியபடியே, சப்தமிட்டபடி ரகளையில் ஈடுபட்டனர்.
இது குறித்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த, பச்சையப்பன் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவன் பரத், 18 மற்றும் 17 வயது மாணவனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும், உடனிருந்த மாணவர்கள் ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

