/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சூதாட்டத்தில் தகராறு நண்பனை கத்தியால் குத்திய இருவருக்கு வலை
/
சூதாட்டத்தில் தகராறு நண்பனை கத்தியால் குத்திய இருவருக்கு வலை
சூதாட்டத்தில் தகராறு நண்பனை கத்தியால் குத்திய இருவருக்கு வலை
சூதாட்டத்தில் தகராறு நண்பனை கத்தியால் குத்திய இருவருக்கு வலை
ADDED : டிச 10, 2024 08:04 PM
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அடுத்த, குண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் உதயசூரியன், 28, அதே பகுதியில் உள்ள உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
சில நாட்களாக வேலைக்கு செல்லாமல், மது அருந்திவிட்டு அதே பகுதியில் உள்ள தன் நண்பர்களுடன் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்று, உதயசூரியன் அவரது நண்பர்களான அய்யப்பன், 32, ராஜேஷ், 34, உடன் மது அருந்தி விட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு போது, அய்யப்பன் தொடர்ந்து தோல்வியடைந்து வந்துள்ளார்.
இருவருக்கும் எற்கெனவே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று உதயசூரியன், அய்யப்பனிடம் பணம் கேட்ட போது, அத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் உதயசூரியன் கழுத்தில் குத்தினார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துமனைக்கு அனுப்பினர். இது குறித்த புகாரின் படி, சுங்குவார்சத்திரம் போலீசார், அய்யப்பன் மற்றும் ராஜேஷ் இருவரை தேடி வருகின்றனர்.