/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இன்று இரவு முழு சந்திர கிரகணம் காஞ்சி கோவில்களில் நடை அடைப்பு
/
இன்று இரவு முழு சந்திர கிரகணம் காஞ்சி கோவில்களில் நடை அடைப்பு
இன்று இரவு முழு சந்திர கிரகணம் காஞ்சி கோவில்களில் நடை அடைப்பு
இன்று இரவு முழு சந்திர கிரகணம் காஞ்சி கோவில்களில் நடை அடைப்பு
ADDED : செப் 06, 2025 11:29 PM
காஞ்சிபுரம்:இன்று இரவு நடைபெறும் முழு சந்திர கிரகணத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் நடைசாற்றப்படுவதில் பல்வேறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று இரவு சந்திரகிரகணம் 9:57 மணிக்கு துவங்கி அதிகாலை 1:26 மணிக்கு முடிகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் இன்று ஆதிசங்கரர் உப நிஷத் மடத்திற்கு எழுந்தருள்வதாலும், இரவு சந்திர கிரகணம் நடைபெறுவதையொட்டி இன்று, காலை 9:00 மணி முதல், இரவு வரை பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் கிடையாது.
ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் காமாட்சி அம்மனை தரிசனம் செய்ய வர நினைக்கும் பக்தர்கள் தங்கள் பயண திட்டத்தை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும்.
நாளை, திங்கட்கிழமை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் நடைபெறும்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், சந்திர கிரகணத்தையொட்டி, நடை சாற்றப்பட மாட்டாது. திருபவித்ர உத்சவம் முதல் நாள் பூர்ணாஹூதி முடிந்து வழக்கம் போல் திருசாதம் அமுது செய்து பின்னர் கோவில் நடை சாற்றப்படும்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், இன்று, மாலை 6:00 மணிக்கு நடைசாற்றப்பட்டு, நாளை காலை வழக்கம்போல் கோவில் திறக்கப்படும். காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவிலில் இன்று மதியம் 1:00 மணிக்கு நடைசாற்றப்பட்டு, நாளை பரிகார பூஜைக்கு பின் காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்படும்.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் இன்று மதியம் 1:00 மணிக்கு நடைசாற்றப்பட்டு நாளை காலை வழக்கம்போல நடை திறக்கப்படும்.
இதேபோல, கச்சபேஸ்வரர் கோவிலில் இன்று மாலை 6:30 மணிக்கு நடைசாற்றப்பட்டு நாளை காலை பரிகார பூஜைக்குப்பின் வழக்கம்போல நடைதிறக்கப்படும்.