/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கெட்டுப்போன புளியோதரை 'சப்ளை' தியாகராஜர் கோவில் பக்தர்கள் அதிர்ச்சி
/
கெட்டுப்போன புளியோதரை 'சப்ளை' தியாகராஜர் கோவில் பக்தர்கள் அதிர்ச்சி
கெட்டுப்போன புளியோதரை 'சப்ளை' தியாகராஜர் கோவில் பக்தர்கள் அதிர்ச்சி
கெட்டுப்போன புளியோதரை 'சப்ளை' தியாகராஜர் கோவில் பக்தர்கள் அதிர்ச்சி
ADDED : பிப் 19, 2024 06:27 AM

திருவொற்றியூர், : திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது, மாசி பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவதால், கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் அம்மன் சன்னதி அருகே, தனியார் பிரசாதம் விற்பனை செய்யும் கடையில், பிரசாதங்களை வாங்கி உண்பர்.
வழக்கம்போல, நேற்று விற்பனை நடந்து கொண்டிருந்தது. அப்போது, வினியோகம் செய்யப்பட்ட புளியோதரை கெட்டுப் போன வாசனை வீசியதால், வாங்கிய பலரும் திருப்பி ஒப்படைத்தனர்.
இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த கோவில் நிர்வாகம், 'கெட்டுப்போனதாக கூறப்படும் புளியோதரையை விற்பனை செய்யக்கூடாது' என அறிவுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து, அவற்றை கோணி மூட்டையில் கட்டி, குளக்கரை அருகேயுள்ள குப்பைத்தொட்டியில் போட்டு விட்டனர்.
விசாரணையில், நேற்று முன்தினம் மீதமான பழைய புளியோதரையை, நேற்று தயார் செய்யப்பட்ட புளியோதரையுடன் சேர்த்து லாபத்திற்காக விற்பனை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இனி, இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, கோவில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.

