/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வெளியேற வழியில்லாத தாலுகா அலுவலக வளாகம்
/
மழைநீர் வெளியேற வழியில்லாத தாலுகா அலுவலக வளாகம்
ADDED : டிச 13, 2024 02:07 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத்- ஒரகடம் சாலையில், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே தாசில்தார் அலுவலகம் இயங்குகிறது.
இந்த அலுவலகத்திற்கு முன் உள்ள வளாகம், தாழ்வாக மழைநீர் வெளியேற வசதி இல்லாமல் உள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால், வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகம்செல்லும் வழி, நீரில் மூழ்கி காணப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் மழைபெய்யும் போது இதே நிலை தொடர்கிறது. அலுவலகத்திற்கு உள்ளே சென்று வரும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முழங்கால் வரை தேங்கும் மழைநீரில் நடந்து மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் தாசில்தார் அலுவலக வளாகத்தில்,மழைநீர் தேங்காமல் வெளியேறும் வகையிலான வழி வகை ஏற்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

