/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விண்வெளி சார்ந்த அனுபவ பயிற்சி முகாம்
/
விண்வெளி சார்ந்த அனுபவ பயிற்சி முகாம்
ADDED : பிப் 26, 2024 04:58 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு, விண்வெளி அறிவு மற்றும் அனுபவ பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இப்பயிற்சிக்கு, ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் விமல்குமார் தலைமை வகித்தார்.
ஸ்பேஸ் சோன் இந்தியா ஏரோடைனமிக் பயிற்சி பட்டறையின் பயிற்சியாளர்கள் நவீன் பங்கேற்று, 'ட்ரோன்' கேமராவை இயக்குவது குறித்து, செயல் விளக்கம் அளித்தார்.
அதே நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு பயிற்சியாளர் ஷாகுல் என்பவர், நீரின் அழுத்தத்தால் விண்ணில் பறக்கும் கருவிகளின் வேகம் குறித்து, பள்ளி மாணவ- - மாணவியர் இடையே, செயல் வழி கற்றல் மூலமாக எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு, படுநெல்லி ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மாரி வரவேற்றார். துணை முதல்வர் மாலினி நன்றி கூறினார்.

