/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேன்ஹோலில் அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
/
மேன்ஹோலில் அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
மேன்ஹோலில் அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
மேன்ஹோலில் அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ADDED : மார் 02, 2024 10:49 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இரட்டை மண்டபம் சிக்னலில் இருந்து, உலகளந்தப் பெருமாள் கோவில் வழியாக, செங்கழுநீரோடை வீதிக்கு செல்லும் நகர சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, காஞ்சி காமாட்சியம்மன், உலகளந்தப் பெருமாள் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இது தவிர, வாகன ஓட்டிகளும் செல்கின்றனர்.
இதில், உலகளந்தப் பெருமாள் கோவில் தெருவில், தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள மேன்ஹோலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்து செல்கிறது.
இந்த கழிவுநீர், இரட்டை மண்டபம் சிக்கலில் தேங்கி, கால்வாய் வழியாக வெளியேறுகிறது.
இதை கண்காணித்து தடுக்க வேண்டிய மாநகராட்சி ஊழியர்கள், மேன்ஹோலில் ஏற்பட்ட அடைப்பு நீக்குவதில் மெத்தனம் காட்டி வருவதாக, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, உலகளந்தப் பெருமாள் கோவில் தெரு மேன்ஹோலில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

