/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.41 கோடியில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி கலெக்டர் வளாகத்தில் சிறுதானிய கடை திறப்பு

ADDED : பிப் 09, 2024 12:47 AM

காஞ்சிபுரம்:ஈரோடு மாவட்டத்தில், அமைச்சர் உதயநிதி பங்கேற்ற மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியின் நேரலையை, காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், அமைச்சர் அன்பரசன், கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் நேற்று பார்த்தனர்.
இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 347 மகளிர் உதவி குழுக்களுக்கு, 34.8 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, 'தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் சார்பில், 76 குழுக்களுக்கு 40 லட்ச ரூபாய் மதிப்பில், நகர்ப்புற வாழ்வாதார இயக்க 81 குழுக்களுக்கு 6.3 கோடி ரூபாய் மதிப்பில், என, 41 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கடன்கள் வழங்கப்பட்டன.
மேலும், கலெக்டர் வளாகத்தில், 3.6 லட்சம்ரூபாய் மதிப்பில் மகளிர் குழுவினர் அமைத்த சிறுதானிய கடை மற்றும் வாகனங்களை அமைச்சர்அன்பரசன் திறந்து வைத்தார்.