/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழைய இரும்பு கழிவு பொருட்களால் விபத்து அபாயம்
/
பழைய இரும்பு கழிவு பொருட்களால் விபத்து அபாயம்
ADDED : டிச 23, 2025 05:30 AM

வா லாஜாபாத் - கீழச்சேரி மாநில நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த, எச்சூர் சந்திப்பில் பழைய இரும்பு கடை உள்ளது.
சுங்குவார்சத்திரம் சுற்றியுள்ள ஏராளமான தொழிற் சாலையில் இருந்து, கிலோ கணக்கில் பிளாஸ்டிக், இரும்பு, அட்டை உள்ளிட்டவைகளை எடைக்கு போட்டு பணம் பெற்று வருகின்றனர். அவ்வாறு வரும், பழைய பொருட்களை சாலையோரங்களில் குவித்து வைத்துள்ளனர். இதனால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், விபத்துகள் நடந்து வருகின்றன.
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள, பழைய இரும்பு கடை கழிவுகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- து.ஜானகிராமன், சுங்குவார்சத்திரம்.

