/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாய் அடைப்பால் சாலையில் தேங்கும் மழைநீர்
/
வடிகால்வாய் அடைப்பால் சாலையில் தேங்கும் மழைநீர்
ADDED : டிச 20, 2025 05:30 AM

காஞ்சிபுரம்: ஓரிக்கையில், வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் சாலையில் தேங்கி உள்ளது.
காஞ்சிபுரம் -- -உத்திரமேரூர் சாலை, ஓரிக்கையில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓரிக்கை மாரியம்மன் கோவில் தெரு அருகில், வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் மழைநீர் வெளியேற வழியின்றி, சாலையோரம் தேங்கி உள்ளது. தேங்கும் மழைநீரால் அப்பகுதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை மாரியம்மன் கோவில் தெரு அருகில், மழைநீர் தேங்காமல் இருக்க, வடிகால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

